செய்திகள்
குருமூர்த்தி

தனக்கு முன் இருக்கும் பொறுப்பு ரஜினிக்கு தெரியும்- துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு

Published On 2020-01-14 14:42 GMT   |   Update On 2020-01-14 14:42 GMT
ரஜினிக்கு முன்னர் உள்ள பொறுப்பு அவருக்கு என்ன என்பது தெரியும் என்று துக்ளக் விழாவில் ஆசிரியர் குருமூர்த்தி பேசியுள்ளார்.
சென்னை:

துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது:-

தனக்கு முன் இருக்கும் பொறுப்பு என்ன என்பது நடிகர் ரஜினிக்கு தெரியும். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நாத்திக அரசியலின் முதுகெலும்பை உடைத்தவர். ஜேஎன்யூ பல்கலைக்கழகம் திருத்தப்பட வேண்டிய ஒன்று. திருத்த முடியவில்லை எனில் மூடப்பட வேண்டிய ஒன்று. குடியுரிமை சட்டத்தை முதலில் மாற்ற வேண்டும் என சொன்னவர் ஜவஹர்லால் நேரு . 

லஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. இன்னும் மூன்று அல்லது ஆறு மாதத்தில் நாட்டின் பொருளாதார நிலை மாறும் என தெரிவித்தார்.

இந்த விழாவில் துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு சிறப்பு மலரை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். வெங்கையா நாயுடு வெளியிட்ட சிறப்பு மலரை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். 

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தல் அறிவாளி என்பார்கள். சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. சோ ஒரு ஜீனியஸ், ஜீனியஸ் என்பதை அடையாளப்படுத்த சில ஆண்டுகளாகும் . 

தான் ஜீனியஸ் என்பதை நிருபிக்க சோ எடுத்த துறை பத்திரிகை துறையாகும். அவரது ஆயுதம் துக்ளக். சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது. தற்போதைய சூழலில் சோ போன்ற பத்திரிகையாளர் அவசியம் தேவை.

கவலைகள் அன்றாடம் வரும், அதை நிரந்தரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக்கொள்வதும் நமது கையில்தான். கவலையை நிரந்தரமாக்கிக் கொண்டால் நோயாளி, தற்காலிகமாக்கிக் கொண்டால் அறிவாளி. பால் போன்ற உண்மை செய்தியில் தண்ணீரை கலந்து விடக் கூடாது. பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும். 

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். 
Tags:    

Similar News