செய்திகள்
மதுரை பேருந்து நிலையம்

மதுரை பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீஸ் தீவிர சோதனை

Published On 2020-01-14 04:52 GMT   |   Update On 2020-01-14 07:06 GMT
மதுரை பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் போனில் பேசினார்.

அப்போது அவர் மதுரையில் உள்ள பஸ் நிலையங்களில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

சென்னை போலீசார், உடனடியாக மதுரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம், பெரியார் பஸ் நிலையம் உள்பட 5 பஸ் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. எனவே இது புரளி என்பது தெரிய வந்தது.

இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சூளைமேட்டில் இருந்து செல்போனில் பேசி மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மன நலம் பாதிக்கப்பட்ட மையத்தில் இருந்து வாலிபர் ஒருவர் பேசி இருப்பது தெரிய வந்தது.
Tags:    

Similar News