செய்திகள்
மணல் கடத்தல்

கங்கைகொண்டானில் முறையான ஆவணம் இன்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

Published On 2020-01-11 08:16 GMT   |   Update On 2020-01-11 08:16 GMT
கங்கைகொண்டானில் முறையான ஆவணம் இன்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கசமாடன்(வயது 23). இவர் அப்பகுதியில் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார்.

இவர் நேற்று கரூரில் இருந்து கங்கைகொண்டானுக்கு லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். கங்கைகொண்டான் செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கசமாடன் ஓட்டி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் இருந்ததையடுத்து கசமாடனிடம் அதற்குரிய ஆவணங்களை கேட்டுள்ளனர்.

ஆனால் மணல் ஏற்றிவந்ததற்கான எந்தவொரு முறையான ஆவணமும் அவரிடம் இல்லாததால் போலீசார் திருட்டு மணல் ஏற்றிவந்ததாக கசமாடன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News