செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 4 நாளில் 2 அடி சரிவு

Published On 2020-01-10 10:01 GMT   |   Update On 2020-01-10 10:01 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 2 அடிக்கு மேல் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 1168 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1029 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 10 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 6-ந் தேதி 116.01 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 114.33 அடியானது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 113.76 அடியானது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 2 அடிக்கு மேல் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News