செய்திகள்
நெல்லை கண்ணன்

வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு

Published On 2020-01-08 16:16 GMT   |   Update On 2020-01-08 16:16 GMT
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை:

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கடந்த 29-ந்தேதி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறாக கூறினார். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, அவர் கடந்த 3-ந்தேதி ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது சில காரணங்களுக்காக மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனாலும், நேற்று மீண்டும் ஜாமீன் கோரி மனு அளித்தார். நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் சிவமுத்து ஜாமீன் வழங்குவது தொடர்பாக ஆட்சேபணை தெரிவித்தார்.

மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கூறினார். இதையடுத்து நீதிபதி நசீர் அகமது ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில்  நெல்லை கண்ணன் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது பேச்சு தவறாக புரிந்து கொண்டு வழக்கு தொடரபபட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News