செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

வாக்கு எண்ணிக்கை வீடியோ - தேர்தல் ஆணையம் கோரிக்கையை நிராகரித்து ஐகோர்ட் அதிரடி

Published On 2020-01-08 12:08 GMT   |   Update On 2020-01-08 13:01 GMT
வாக்கு எண்ணிக்கை வீடியோ விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் வைத்த கோரிக்கையை ஐகோர்ட்டு மதுரை கிளை இன்று மீண்டும் நிராகரித்தது.
மதுரை:

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் 
வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ நகலை ஐகோர்ட்டு பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய ஆகும் தாமதத்திற்கு கூறும் காரணம் ஏற்புடையதல்ல. எனவே, சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் தர இயலாது என உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News