செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

மீன் ஏற்றுமதியால் ரூ.5 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2020-01-08 08:52 GMT   |   Update On 2020-01-08 08:52 GMT
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் டன் மீன் ஏற்றுமதி செய்யப்படுவதால் ரூ.5 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி கிடைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது நவீன ரக மீன்கள் வளர்ப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 15.08 லட்சம் நவீன ரக மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. 5 லட்சம் டன் மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி கிடைக்கிறது. தொடர்ந்து மீன் சாப்பிட்டால் மாரடைப்பு வராது, கண் பார்வை நன்றாக இருக்கும், தோல் வியாதிகள் வராது. எனவே மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இன்றைய இளைஞர்கள் படித்து முடித்த பிறகு அரசு வேலை கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பதை விட மீன் வளர்ப்பது போன்ற சிறு தொழில்களை செய்யலாம். இதற்கு அரசும் மானியங்கள் உள்பட பல்வேறு உதவிகளை செய்கிறது. எனவே இளைஞர்கள் சிறுதொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News