செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

புதிய நெல், தானியங்களை கண்டுபிடிக்க ரூ.5 கோடி - எடப்பாடி பழனிசாமி தகவல்

Published On 2020-01-08 02:27 GMT   |   Update On 2020-01-08 02:27 GMT
புதிய நெல் ரகம், புதிய தானிய வகைகளை கண்டுபிடிப்பதற்காக கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்திற்கு தமிழக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:

சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது, கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

புதிய நெல் ரகத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர் ராமச்சந்திரன் கருத்து கூறி இருக்கிறார். புதிய நெல் ரகம், புதிய தானிய வகைகளை கண்டுபிடிப்பதற்காக, அதிக விளைச்சல் தரக்கூடிய தானியத்தை கண்டுபிடிப்பதற்காக கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்திற்கு தமிழக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News