செய்திகள்
கோப்பு படம்

திருச்செந்தூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2020-01-07 12:06 GMT   |   Update On 2020-01-07 12:06 GMT
திருச்செந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆகியோர் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி கடைகளில் செயல் அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வியாபாரிகளுக்கு ரூ. 2 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News