செய்திகள்
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி.

ஏனாமில் மலர்கண்காட்சியை திறந்து வைத்தார் நாராயணசாமி

Published On 2020-01-07 11:16 GMT   |   Update On 2020-01-07 11:16 GMT
ஏனாமில் 18-வது மக்கள் திருவிழா மற்றும் மலர் கண்காட்சியை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:

ஏனாமில் 18-வது மக்கள் திருவிழா மற்றும் மலர் கண்காட்சியின் தொடக்க விழா பாலயோகி விளையாட்டரங்கில் நடந்தது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி மக்கள் திருவிழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை வகித்தார்.

நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா, நடிகர் சுமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வருகிற 9-ந் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மலர்கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது.

முன்னதாக நபார்டு வங்கி உதவியுடன் ரூ.25 கோடியில் கட்டப்பட்ட பிரெஞ்சு கால்வாய் இணைப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இதன்மூலம் 363 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் 4 இடங்களில் தரம் உயர்த்தப்பட்டு சுகாதார நல வாழ்வு மையங்கள், ஆம்புலன்ஸ் சேவையையும் திறந்து வைத்த நாராயணசாமி, ஜிப்மர் ஆலோசனை மையம், மினி உள்விளையாட்டரங்கம் ஆகியவற்றுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
Tags:    

Similar News