செய்திகள்
கைது

கடன் வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி மோசடி - வாலிபர்கள் கைது

Published On 2020-01-07 10:15 GMT   |   Update On 2020-01-07 10:15 GMT
வங்கியில் ரூ.25 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1¼ கோடி மோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர்கள் சரவணன், கிருஷ்ணா. இவர்கள் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தை அணுகி உள்ளனர். நாங்கள் வங்கிகளில் இருந்து நிறுவனங்களுக்கு கடன் வாங்கி கொடுக்கிறோம், உங்கள் நிறுவனத்திற்கு ரூ.25 கோடி வங்கி கடன் வாங்கி தருகிறோம் என்பது கூறி உள்ளனர்.

அதற்கு முன்பணமாக தங்களுக்கு ரூ.1¼ கோடி கமி‌ஷன் தர வேண்டும் என கேட்டனர். இதை நம்பிய கட்டுமான நிறுவனத்தினர் ரூ.1 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரத்தை கமி‌ஷன் முன் பணமாக கொடுத்துள்ளனர்.

ஆனால் சரவணன், கிருஷ்ணா ஆகியோர் கூறியபடி கட்டுமான நிறுவனத்திற்கு வங்கி கடன் வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த கட்டுமான நிறுவனத்தினர் பணத்தை திரும்ப கேட்டும் அவர்கள் கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து கட்டுமான நிறுவனம் சார்பில் சந்தோஷ் லீவிஸ் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி சரவணன், கிருஷ்ணா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News