செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம்

சுபஸ்ரீ மரணம்: ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு கோர்ட்டு ஆணை

Published On 2020-01-06 14:12 GMT   |   Update On 2020-01-06 14:12 GMT
சென்னையில் பேனர் விழுந்து மரணம் அடைந்த சுபஸ்ரீ சம்பவத்தில் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை:

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் சென்டர்மீடியனில் வைக்கப்பட்டிருந்த ‘பேனர்’ காற்றில் சரிந்து சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீயின் முன்னால் திடீரென விழுந்தது.

இதனால் பேனர் மீது மோதி நிலைதடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் ரோட்டில் விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அந்த இடத்திலேயே சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் சுபஸ்ரீ தந்தை ரவி ரூ. 1கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ரூ. 1 கோடி இப்பீடு கோரி சுபஸ்ரீ தந்தை ரவி அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்திருந்தது.  

4 வாரங்களில் ரவி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது

இதற்கிடையே பேனர் விவகாரம், அச்சகங்கள் தொடர்ந்த வழக்குகளை ஜனவரி 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
Tags:    

Similar News