செய்திகள்
கோப்பு படம்

ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் லாரியுடன் காவலில் இருந்த டிரைவர் தப்பி ஓட்டம்

Published On 2020-01-06 11:26 GMT   |   Update On 2020-01-06 11:26 GMT
ஒரத்தநாடு அருகே போலீஸ் நிலையத்தில் திருட்டு மணல் லாரியுடன் காவலில் இருந்த டிரைவர் தப்பி ஓடிய சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓரத்தநாடு:

ஒரத்தநாடு சப்- இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணன் நேற்று நள்ளிரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரத்தநாடு டவுன் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் வேகமாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் டிரைவரை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் லாரியை அங்கு நிறுத்திவிட்டு டிரைவரை போலீஸ் நிலையத்தில் காவலில் வைத்துவிட்டு அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டாராம்.

பின்னர் மீண்டும் காலை 5.30 மணியளவில் போலீஸ் நிலையத்திற்கு வந்த போது காவலில் இருந்த டிரைவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை காணவில்லையாம். லாரி மற்றும் டிரைவர் மாயம் ஆனதை கண்டு அதிர்ச்சியடைந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணன் போலீஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி காமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Tags:    

Similar News