செய்திகள்
மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை கண்டித்து கோட்டை நோக்கி பேரணி - 500 பேர் கைது

Published On 2020-01-06 08:06 GMT   |   Update On 2020-01-06 08:06 GMT
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது எனக்கூறி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது எனக்கூறி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இன்று சேப்பாக்கத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். எனினும் தடையை மீறி பேரணிக்காக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று காலை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே திரண்ட னர்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு வழிவகுக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேடு அபாயகரமானது என அமைப்புகளின் தலைவர்கள் பேசினார்கள். மேலும் இந்த பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்றனர்.

இதில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தலைவர் தியாகு, மக்கள் அதிகாரம் ராஜூ, காளியப்பன், புரட்சிகர இளைஞர் முன்னணி சீராளன், பாடகர் கோபன் உள்பட பலர் பங்கேற்றனர்.



போராட்டக்காரர்கள் எந்த பக்கமும் செல்ல முடியாதபடி நாலாபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்திருந்தனர். பின்னர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News