செய்திகள்
தலைமை செயலகம்

தமிழக சட்டசபை - புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது

Published On 2020-01-06 04:37 GMT   |   Update On 2020-01-06 08:25 GMT
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் சட்டசபையில் கவர்னர் உரையாற்றுவார். கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டம் 4 நாட்கள் அல்லது 5 நாட்கள் நடைபெறும்.

இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் கடந்த 24-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக கவர்னர், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 174 (1) ன் கீழ் சட்டசபை கூட்டத்தை ஜனவரி 6-ம் தேதி கூட்டியுள்ளார். சட்டசபையில் காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் தனபால் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி வருகிறார்.

புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம் எல் ஏக்களும் இதில் பங்கேற்றனர். 
Tags:    

Similar News