செய்திகள்
நாராயணசாமி

புதுவை தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலை - நாராயணசாமி திறந்து வைக்கிறார்

Published On 2020-01-04 09:50 GMT   |   Update On 2020-01-04 09:50 GMT
புதுவை தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்-அமைச்சர் நாராயணசாமி 20-ந் தேதி திறந்து வைக்கிறார்.
புதுச்சேரி:

புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ், தமிழர்களின் அடையாளமாக திகழும் திருவள்ளுவர் சிலையை தமிழ்ச்சங்கத்தில் நிறுவ உள்ளோம். 4½ அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது.

சிலையின் பீடம் நான்கரை அடியில் உள்ளது. மொத்தம் 9 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட உள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்கு வெங்கட்டாநகர் தமிழ்ச்சங்க வளாகத்தில் நடக்கிறது. விழாவுக்கு நான் தலைமை வகிக்கிறேன்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிலையை திறந்து வைக்கிறார். வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன் முதன்மை விருந்தினராகவும், பட்டிமன்ற நடுவர் அப்துல் காதர் சிறப்புரையும் ஆற்றுகின்றனர்.

விழாவில் சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழக தமிழ் வளர்ச்சித் துறை இயக்கனர் விஜயராகவன், முன்னாள் நீதிபதி சேதுமுருகபூபதி, முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்தி பேசுகின்றனர்.

விழாவை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இபேர், அரிசுரேசுபாபு, அசோக் ராஜா ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர். முடிவில் துணைத்தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறுகிறார்.

விழாவின் சிறப்பம்சமாக 500 மாணவர்கள் திருவள்ளுவர் வேடமிட்டு பங்கேற் கின்றனர். கலைக்குழுவின் கண்கவர் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் இந்த விழா வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழ்ச் சங்க துணைத்தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சீனுமோகன்தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News