செய்திகள்
திமுக

திருப்பூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியது

Published On 2020-01-04 06:47 GMT   |   Update On 2020-01-04 06:47 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றி உள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 170 கவுன்சிலர் பதவிகள் உள்ளன.

இதில் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-57, தே.மு.தி.க-4, பாரதிய ஜனதா-3 என மொத்தம் 64 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க.-75, காங்கிரஸ்-9, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-1, இந்திய கம்யூனிஸ்டு -2, ம.தி.மு.க.-1 என மொத்தம் 88 இடங்களை கைப்பற்றி உள்ளது.

சுயேச்சைகள் 18 இடங்களை வென்றுள்ளனர். உடுமலை, பொங்கலூர், பல்லடம், மூலனூர், மடத்துக்குளம், தாராபுரம் ஆகிய ஒன்றியங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பெரும்பான்மை பெற்றுள்ளதால் எளிதாக தலைவர் பதவியை கைப்பற்ற முடியும்.

வெள்ளகோவில், அவினாசி, குடிமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்றுள்ளது.

காங்கயம், குண்டடம், ஊத்துக்குளி, திருப்பூர் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. - தி.மு.க. ஏறத்தாழ சம பலத்துடன் உள்ளதால் தலைவர் பதவியை கைப்பற்ற சுயேச்சைகளின் ஆதரவு தேவைப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டுகள் 17 உள்ளன. இவற்றில் அ.தி.மு.க. -13, தி.மு.க.-3, காங்கிரஸ்-1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மாவட்ட ஊராட்சிகளில் பெரும்பான்மை பெற்றுள்ள அ.தி.மு.க. ஊராட்சி ஒன்றிய வார்டுகளை இழந்துள்ளது.கடந்த முறை 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்றிருந்த நிலையில் தற்போது வெற்றியை இழந்துள்ளது.

Tags:    

Similar News