செய்திகள்
கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிகாரிகளுடன் கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி

Published On 2020-01-04 04:31 GMT   |   Update On 2020-01-04 05:11 GMT
உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மிக முக்கியம், விளையாட வயது தடையல்ல என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை:

சென்னையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மெரினா கடற்கரை கண்ணகி சிலை எதிரே உள்ள மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.

போட்டியை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, வெள்ளை தொப்பி அணிந்து கிரிக்கெட் வீரர் போல் வந்திருந்தார்.

அங்கு தலைமைச் செயலாளர் சண்முகம், நிஜாமுதீன் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், டி.ஜி.பி. திரிபாதி மற்றும் அன்பு, பெரியய்யா, சேசாயி உள்பட 20-க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளும் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளும் வெள்ளை பேண்ட்-சட்டை அணிந்து விளையாட்டு வீரர்களாக களம் இறங்கி இருந்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பேசினார். உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம் என்று கூறினார்.

பிறகு விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார். அமைச்சர் ஜெயக்குமார், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் பந்து வீசினர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி மட்டையால் பந்தை விளாசினார். இதைப் பார்த்த அதிகாரிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து போட்டிகள் தொடர்ந்து நடந்தன.
Tags:    

Similar News