செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2020-01-03 09:57 GMT   |   Update On 2020-01-03 09:57 GMT
தொடர்ந்து நீர்மட்டம் சரிந்து வருவதால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலூர்:

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் கோடை, சம்பா என இரு போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது முதல் போக அறுவடை பணிகள் முடிந்துள்ளது.

இதனால் உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் 2-ம் போக நெல் நடவு பணிகளில் விவசாயிகள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை முற்றிலும் நின்று விட்டதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

எனவே அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 320 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 3361 மில்லியன் கடியாக உள்ளது.

வைகை அணை நீர்மட்டம் 58.51 அடி. வரத்து 804 கன அடி. திறப்பு 810 கன அடி. இருப்பு 3327 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.40 அடி. வரத்து 35 கன அடி. திறப்பு 80 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 27 கன அடி.

Tags:    

Similar News