திருச்செங்கோடு 2வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் திருநங்கை ரியாவுக்கு கனிமொழி எம்.பி., டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்செங்கோடு 2வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் திருநங்கை ரியாவுக்கு திமுக எம்.பி., கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் திருநங்கைகளுக்கு இதுபோன்ற சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். திருநங்கைகளுக்கு இதுபோன்ற சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும். மாற்றத்திற்கு வித்திடுவதில், எப்போதும் தொடக்கப் புள்ளியாக திமுக திகழ்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.