செய்திகள்
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை.

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

Published On 2020-01-01 02:07 GMT   |   Update On 2020-01-01 05:32 GMT
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைந்தாலும், கடல் காற்று கிழக்கு திசையில் இருந்து வந்து கொண்டிருப்பதால் மேலும் 4 நாட்களுக்கு பருவமழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு லேசான தூறல் விழுந்த வண்ணம் இருந்தது.

இன்று காலை 6 மணி அளவில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

பிராட்வே, எழும்பூர், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, கொரட்டூர், வில்லிவாக்கம், அயனாவரம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், மையிலாப்பூர், அடையாறு, துரைப்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை உள்பட நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

புத்தாண்டுக்கு கோவிலுக்கு புறப்பட்ட பொதுமக்கள் பலர் மழையில் நனைந்தனர்.  1 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

பருவமழை நீடிப்பதால் இன்று இரவும் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News