செய்திகள்
மின்சார ரெயில்

மின்சார ரெயில் சேவை இன்று மாற்றம்

Published On 2019-12-31 19:53 GMT   |   Update On 2019-12-31 19:53 GMT
பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று(புதன்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இரவு 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* தாம்பரம்-கடற்கரை இரவு 11.15, 11.30, 11.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் கடற்கரை-தாம்பரம் இரவு 11, 11.30, 11.45, 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News