செய்திகள்
பள்ளிகள் திறப்பு

அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் அரசுப் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறப்பு

Published On 2019-12-30 12:55 GMT   |   Update On 2019-12-30 14:39 GMT
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் அரசு மற்றும் உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அரையாண்டுதேர்வுகள் 23-ந்தேதி முடிவடைந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். அன்றே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 3-ம் தேதி என மாற்றப்பட்டது.



இந்நிலையில், விடுமுறைக்காக மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை இன்று மாலை அறிவித்துள்ளது.
Tags:    

Similar News