செய்திகள்
அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன்

புதுவையில் ஆளுநர்- முதல்வர் அதிகார மோதல்: மத்திய அரசு தலையிட அ.தி.மு.க. கோரிக்கை

Published On 2019-12-30 06:31 GMT   |   Update On 2019-12-30 06:31 GMT
புதுவையில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையிலான மோதலில் மத்திய அரசு தலையிட வேண்டும் என அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையிலான அதிகார மோதல் வலுத்து வருகிறது. ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். புதுவையின் வளர்ச்சிக்கு ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக உள்ளதால் அவரை மாற்ற வேண்டும் என்று ஜனாதிபதியிடம் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்த விழாவில் பேசிய நாராயணசாமி, புதுவையில் அதிகாரி ஒருவர் மரணம் அடைந்ததற்கு கிரண்பேடி கொடுத்த நெருக்கடியே காரணம் என்று குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு ஆளுநர் கிரண் பேடியும் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார்.



இவ்வாறு இருவருக்குமிடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆளுநரின் நெருக்கடியால் அதிகாரி உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் கூறும் புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும்,
ஆளுநர் மீதான புகார் தொடர்பாக மக்கள் மன்றத்தில் முதல்வர் நிரூபிக்க வேண்டும் என்றும் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News