செய்திகள்
விஜயகாந்த்

சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கியது வரவேற்கத்தக்கது - விஜயகாந்த்

Published On 2019-12-27 13:57 GMT   |   Update On 2019-12-27 13:57 GMT
கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியது வரவேற்கத்தக்கது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கோவை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சந்தோஷ்குமார் (34) என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று மதியம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

“சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சந்தோஷ்குமார் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த தீர்ப்பை வழங்கிய போக்சோ நீதிமன்றத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு தே.மு.தி.க. சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News