செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமி

அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தை சேர்க்கவேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Published On 2019-12-26 15:44 GMT   |   Update On 2019-12-26 15:44 GMT
அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜ்னா என்று பெயரிடப்பட்டுள்ள அடல் நிலத்தடி நீர் திட்டத்தை, டெல்லியில்  உள்ள விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முதற்கட்டமாக குஜராத், அரியானா, ராஜஸ்தான், கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. 

இந்நிலையில், அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டமான அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும். நீர் ஆதாரங்களை மேம்படுத்த குடிமராமத்து உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News