செய்திகள்
உபி துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா

உ.பி. துணை முதல் மந்திரி குற்றச்சாட்டு - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கண்டனம்

Published On 2019-12-25 06:53 GMT   |   Update On 2019-12-25 06:53 GMT
உத்தர பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளதாக குற்றம்சாட்டி உள்ள உபி துணை மந்திரிக்கு, அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு தலைவர் டாக்டர் முகமது ‌ஷம்மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் தங்களின் ஆதரவாளர்களை தவறாக குற்றம்சாட்டி இயக்கத்திற்கு எதிராக பா.ஜக. அரசு சூழ்ச்சி செய்கிறது. இதனை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மத்திய செயலகம் கண்டிக்கிறது. லக்னோவில் கைது செய்யப்பட்ட மாநில தற்காலிக கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் வசீம் அகமது மற்றும் உறுப்பினர்கள் காரி அஸ்பாக், முகம்மது நதீம் ஆகியோர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வன்முறைக்கு பின்னுள்ள சூத்திரதாரிகளாக ஊடகத்தின்முன் காட்டப்படுகின்றனர்.

அனைத்து அசம்பாவிதங்களின் பின்னணியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளதாக மாநில துணை மந்திரி தினேஷ் சர்மா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதை தொடர்ந்து காவல் துறையின் இந்த செயல்பாடு அமைந்திருந்ததாக தெரிகிறது. அரசியல் பழிவாங்கலை மாநில அரசாங்கம் நிறுத்தி அனைத்து பொய் குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News