செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2019-12-20 10:19 GMT   |   Update On 2019-12-20 10:19 GMT
மழை நின்றதால் முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
கூடலூர்:

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 554 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் 127.20 அடியாக சரிந்துள்ளது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று வரை 1000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் 511 கன அடி நீர்மட்டுமே திறக்கப்பட்டது. வைகை அணையின் நீர்மட்டம் 66.99 அடியாக உள்ளது. 1105 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2090 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.60 அடியாக உள்ளது. 56 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. 42 கன அடி நீர் வருகிறது. 27 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Tags:    

Similar News