செய்திகள்
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம்

சென்னைக்கு பார்சலில் வந்த ராணுவ குண்டுகள் -அதிகாரிகள் விசாரணை

Published On 2019-12-18 05:10 GMT   |   Update On 2019-12-18 05:10 GMT
ரெயிலில் பார்சல் மூலம் அனுப்பப்பட்ட ராணுவ குண்டுகள் முகவரி மாறி சென்னைக்கு வந்தது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.
சென்னை:

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் வந்த சங்கமித்ரா ரெயிலில் ஒரு பார்சல் வந்தது. அது ராணுவத்தில் இருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த பார்சலை வாங்குவதற்கு யாரும், பார்சல் அலுவலகத்திற்கு வரவில்லை. இதையடுத்து அந்த பார்சல், யானைக் கவுனியில் உள்ள ரெயில்வே குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் 6 மாதமாக அந்த பார்சலுக்கு யாரும் உரிமை கோராததால் ஏலம் விட முயன்றனர். இதற்காக பார்சலை ஆய்வு செய்தபோது, அதில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் 10 கையெறி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும், 172வது பட்டாலியனான அந்தமானுக்குப் பதில், 72வது பட்டாலியனான சென்னைக்கு அந்த பார்சல் முகவரி மாறி வந்திருப்பதும் தெரியவந்தது. 

இதுபற்றி ரெயில்வே போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில், கையெறி குண்டுகள் பற்றி ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.
Tags:    

Similar News