செய்திகள்
மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 2.98 லட்சம் பேர் வேட்புமனுத் தாக்கல்

Published On 2019-12-17 13:05 GMT   |   Update On 2019-12-17 13:05 GMT
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 2,98,335 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் 27  மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 2,98,335 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மொத்தம் உள்ள 27 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு, கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி ஒன்றிய, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 2,98,335 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2.06 லட்சம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 54,747 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32,939 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,992 பேர்  வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற வரும் 19-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
Tags:    

Similar News