செய்திகள்
வெங்காயம்

வெங்காயம் விலை மீண்டும் உயர்வு

Published On 2019-12-17 09:22 GMT   |   Update On 2019-12-17 09:22 GMT
வரத்து 2 நாட்களாக குறைந்துள்ளதால் வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கிலோ ரூ.120க்கும், குறைந்தபட்சமாக ரூ.40க்கும் விற்கப்பட்டது.
சென்னை:

உச்சத்தில் இருந்த பெரிய வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியது. மகாராஷ்டிரா, ஆந்திராவில் இருந்து வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கியதால் ரூ.30 வரை குறைந்தது. 25, 30 லாரிகளில் வந்த வெங்காயம் 60 லாரிகளாக உயர்ந்தது.

இதனால் பெரிய வெங்காயம் தரத்தின் அடிப்படையில் பிரித்து விற்கப்படுகிறது. சில வகை ரூ.150 வரை விற்கப்பட்ட பெரிய வெங்காயம் விலை குறைந்தது.

எகிப்து வெங்காயமும் மார்க்கெட்டுக்கு வந்ததால் ஓட்டல்களுக்கு அதனை பயன்படுத்த தொடங்கினர்.

இந்த நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர், அகமதுநகரில் இருந்தும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் பெரிய வெங்காயம் தற்போது வந்து கொண்டிருக்கிறது. அங்கு மீண்டும் மழை பெய்ததால் வரத்து 2 நாட்களாக குறைந்துள்ளது. நேற்று 50 லாரியும் இன்று 40 லாரியிலும் வெங்காயம் வந்துள்ளது. ஒரு சில நாட்களில் சரியாகிவிடும்.

வரத்து குறைந்ததால் வெங்காயம் அதிகபட்சமாக கிலோ ரூ.120ம், குறைந்தபட்சமாக ரூ.40க்கும் விற்கப்பட்டது.

சில்லறை வியாபாரிகள் ரூ.140, ரூ.120, ரூ.100 விலையில் விற்கிறார்கள். வெங்காய விலை எதிர்வரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பெரிய வெங்காயம் விலையில் மாற்றம் ஏற்பட்டபோதிலும் சிறிய வெங்காயம் விலை இன்னும் குறையவில்லை. மொத்த விலையில் கிலோ ரூ.160க்கும் சில்லறையில் ரூ.200 வரையிலும் விற்கிறார்கள்.

Tags:    

Similar News