செய்திகள்
வேட்புமனு தாக்கல் செய்ய திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்துக்கு டிராக்டர்களில் வந்தனர்

உள்ளாட்சி தேர்தல் - திருவள்ளூர் மாவட்டத்தில் 7324 பேர் வேட்புமனு தாக்கல்

Published On 2019-12-14 09:42 GMT   |   Update On 2019-12-14 09:42 GMT
உள்ளாட்சி தேர்தலுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 7324 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 526 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3945 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 230 பேரும், மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு 24 பேரும் என மொத்தம் 4725 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் 5 நாட்களாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

கடந்த 5 நாட்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 25 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 275 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 1616 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5405 பேர் என இதுவரை 7324 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் யாரும் இது வரை வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அ.ம.மு.க.வினர் மட்டும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர்களில் ஏற்கனவே 3 முறை 4 முறை வெற்றி பெற்றவர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

Tags:    

Similar News