செய்திகள்
முக ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் மரண அடி வாங்கியது அதிமுக தான் - முக ஸ்டாலின்

Published On 2019-12-14 07:47 GMT   |   Update On 2019-12-14 08:28 GMT
உள்ளாட்சி தேர்தலில் வழக்கில் மரண அடி வாங்கியது அ.தி.மு.க.தான் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 11-ம் தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்பாக தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, இந்த விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் தெளிவுபடுத்த ஒன்றும் இல்லை என தெரிவித்தார்.

இதுதொடர்பாக கருத்து கூறிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “உள்ளாட்சி தேர்தல் வழக்கில் தி.மு.க.வுக்கு சுப்ரீம் கோர்ட் சம்மட்டி அடி கொடுத்துள்ளது” என குறிப்பிட்டார்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் வழக்கில் மரண அடி வாங்கியது அ.தி.மு.க.தான் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் வழக்கில் மரண அடி வாங்கியது அ.தி.மு.க.தான். தி.மு.க.வின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்ச நீதிமன்றம் பாராட்டவே செய்தது.

அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் தேர்தலை நடத்த துடிக்கும் அ.தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு, அர்ப்பணிப்பு உணர்வு உள்ள தி.மு.க. வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News