செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2019-12-12 08:57 GMT   |   Update On 2019-12-12 08:57 GMT
பி.எஸ்.எல்.வி சி48 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் ஆய்வு போன்றவற்றிற்காக நேற்று 50-வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வு இந்திய திருநாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. பி.எஸ்.எல்.வி சி48 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டி உள்ளனர்.

பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரது முயற்சியும், உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது.

இந்தச் சாதனை இளைய தலைமுறையினரை உற்சாகப்படுத்தி, அவர்களை விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கும். இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பற்பல சாதனைகள் படைத்து, நம் தாய்திருநாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திட இத்தருணத்தில் என் சார்பாகவும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News