செய்திகள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு

Published On 2019-12-11 13:52 GMT   |   Update On 2019-12-11 13:52 GMT
உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் இன்று வெளியிடப்பட்டது.
சென்னை:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு திட்டமிட்ட தேதியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

இதில், 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை மாநகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் வெளியிட்டார். அதன்படி, 

* வேலூர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி எஸ்சி பிரிவுக்கு ஒதுக்கீடு.

* திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு.

* 9 மாநகராட்சிகள் தவிர மீதமுள்ள 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பொது பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

* 15 மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை மாநகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் வெளியிட்டார்.
Tags:    

Similar News