செய்திகள்
கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

வாக்குச்சாவடி மாற்றத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு - கைகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

Published On 2019-12-11 09:27 GMT   |   Update On 2019-12-11 09:27 GMT
மேலூர் அருகே வாக்குச்சாவடி மாற்றத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக கைகளில் கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கம்பூர் ஊராட்சி ஒன்றியம் சின்னக்கற்பூரம்பட்டியில் கடந்த தேர்தல் வரை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வாக்குச்சாவடி அங்கு கிடையாது என்றும் கம்பூர் வந்து ஓட்டுப்போட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு கம்பூர் ஊராட்சியின் 8 மற்றும் 9-வது வார்டுக்குட்பட்ட சின்னக்கற்பூரம்பட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குச்சாவடி அமைக்காவிட்டால், தேர்தலை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் அறிவித்தனர். இதுதொடர்பாக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.

இருப்பினும் வாக்குச்சாவடி அமைப்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனைத் தொடர்ந்து சின்னக்கற்பூரம்பட்டி, பெருமாக்கிபுதூர் கிராம மக்கள் இன்று ஊர் மந்தையில் ஒன்று கூடினர்.

500-க்கும் மேற்பட்டோர் திரண்டு கைகளில் கருப்புக் கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கோ‌ஷமிட்டனர்.

தகவல் கிடைத்ததும் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், ஏட்டு சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News