செய்திகள்
டிடிவி தினகரன்

எங்கள் கட்சியை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Published On 2019-12-11 07:52 GMT   |   Update On 2019-12-11 07:52 GMT
இந்திய தேர்தல் ஆணைத்தால் அ.ம.மு.க. பதிவு செய்யப்பட்ட பிறகு கூட தமிழக தேர்தல் ஆணையம் எங்களை நிராகரிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
சென்னை:

அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் பொருளாளர் வெற்றிவேல், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணைத்தால் அ.ம.மு.க. பதிவு செய்யப்பட்ட பிறகு கூட தமிழக தேர்தல் ஆணையம் எங்களை நிராகரிக்கிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. கூட்டணி குறித்து ரஜினி, கமல் என்னிடம் எதுவும் பேசவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம். கட்சி பதவி என்பது ஒரு சாதாரணமான நிகழ்வு. அதற்கே ஆளும் கட்சி எங்களுக்கு பல இன்னல்களை கொடுத்துள்ளது.

அதிகார வர்க்கத்தின் அத்தனை இடையூறுகளையும் கடந்து டிசம்பர் 6-ந்தேதி அ.ம.மு.க. பதிவு செய்யப்பட்டது. அதை ஜெயலலிதா சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்தினோம்.

இலங்கை தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும். இது மதசார்பற்ற நாடு. மத்திய அரசு தாய் ஸ்தானத்தில் இருந்து இதனை அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News