செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்தது

Published On 2019-12-11 06:03 GMT   |   Update On 2019-12-11 06:03 GMT
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ஒரு சவரன் ரூ. 28,728-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை கடந்த 1 வாரமாக இறங்குமுகத்தில் உள்ளது. சென்னையில் நேற்று மாலை ஒரு கிராம் ரூ. 3,597, ஒரு பவுன் ரூ. 28,776-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ. 6 குறைந்து ரூ. 3,591-க்கும், பவுனுக்கு ரூ. 48 குறைந்து ரூ. 28,728-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ. 46.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 46 ஆயிரத்து 500-க்கும் விற்பனையாகிறது.
Tags:    

Similar News