செய்திகள்
வெங்காய மண்டியில் குடிமை பொருள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் திடீர் சோதனை செய்தார்

விக்கிரவாண்டி அருகே வெங்காய மண்டிகளில் அதிரடி சோதனை

Published On 2019-12-11 05:54 GMT   |   Update On 2019-12-11 05:54 GMT
வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் வகையில் விழுப்புரம் நகர பகுதிகளிலுள்ள வெங்காய மண்டிகளில் மாவட்ட குடிமை பொருள் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
விக்கிரவாண்டி:

தமிழகத்தில் வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வெங்காய விலை உயர்வு அதிகரித்து உள்ளது.

இதையடுத்து விலையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு தமிழக சிவில் சப்ளை டி.ஜி.பி., பிரதீப் வி பிலிப் உத்தரவின் பேரில் வெங்காய மண்டிகளில் வெங்காயம் பதுக்கல் செய்யப்பட்டுள்ளதா? என மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட குடிமை பொருள் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டு பிரபு, தயாளன் ஆகியோர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி, தொரவி, ராதாபுரம் மற்றும் விழுப்புரம் நகர பகுதிகளிலுள்ள வெங்காய மண்டிகளில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது வியாபாரிகளிடம் வெங்காயம் பதுக்கி வைத்தால் குற்றம் என்றும் சோதனையின்போது பிடிபட்டால் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News