செய்திகள்
எகிப்து வெங்காயம்

திருப்பூரில் ஒரு கிலோ எகிப்து வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை

Published On 2019-12-10 10:17 GMT   |   Update On 2019-12-10 10:17 GMT
திருப்பூரில் ஒரு கிலோ எகிப்து வெங்காயம் சில்லரை வியாபாரிகளுக்கு ரூ.35-ல் இருந்து ரூ.50 வரையில் விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:

வெங்காய தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து கப்பல்களில் கொண்டு வருகிறது.

எகிப்து நாட்டில் இருந்து கொள்முதல் செய்த 10 டன் வெங்காயம் இன்று காலை பெங்களூரில் இருந்து திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு வந்தது. எகிப்து வெங்காயம் மிக பெரியதாகவும், ரப்பர்போன்றும் உள்ளது. சற்று கருப்பு நிறமாக இருப்பதால் பெண்கள் உடனே வாங்க தயக்கம் காட்டினர்.

இந்நிலையில் சில்லரை வியாபாரிகளுக்கு ஒரு கிலோ ரூ.35-ல் இருந்து ரூ.50 வரையில் விற்பனை செய்யப்பட்டது.

வியாபாரிகள் சில்லரையாக விற்பனை செய்யும்போது விலை சற்று கூடுதலாக விற்பனை செய்வார்கள்.

இந்நிலையில் திருப்பூரில் வெங்காயம் பதுக்கி விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து உணவு வழங்கல் அதிகாரி முருகன், தாசில்தார் மகேஷ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பெங்களூர், ஆந்திராவில் இருந்து வந்த வெங்காயத்தை சோதனை செய்தனர். இது குறித்து மொத்த வெங்காய வியாபாரிகள் கூறும்போது, வரத்து அதிகரித்துள்ளதால் வெங்காய விலை படிப்படியாக குறையும் என்று கூறினர்.

Tags:    

Similar News