செய்திகள்
வெங்காயம்

திருப்பூரில் 13 வெங்காய குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2019-12-10 10:07 GMT   |   Update On 2019-12-10 10:07 GMT
திருப்பூரில் வெங்காயம் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளின் 13 குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
திருப்பூர்:

சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காய விலையை கட்டுப்படுத்த, வெங்காயம் பதுக்கல் சம்பந்தமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஅனுபல்லவி, சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா மற்றும் போலீசார் திருப்பூர் சந்தைப்பேட்டை, உடுமலை, தாராபுரம் பகுதிகளில் உள்ள வெங்காய மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளின் 13 குடோன்களில் சோதனை செய்தனர்.

அரசு நிர்ணயம் செய்துள்ள மொத்த வியாபாரிகள் 50 டன், சில்லரை வியாபாரிகள் 10 டன் அளவுக்கு அதிகமாக வெங்காயம் பதுக்கி வைத்துள்ளார்களா? என்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெங்காயம் எதுவும் பதுக்கி வைக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு அறிவித்துள்ள எடை அளவுக்கு மேல் வெங்காயத்தை யாரேனும் பதுக்கி வைத்திருந்தால் அத்தியாவசிய பண்டங்கள் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News