செய்திகள்
வெங்காயம்

விருதுநகர்-ராஜபாளையம் வெங்காய மண்டிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

Published On 2019-12-10 08:17 GMT   |   Update On 2019-12-10 08:17 GMT
விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வெங்காய மண்டிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

ராஜபாளையம்:

பருவமழையின் தீவிரம் காரணமாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய பயிர்கள் கருகின. இதன் காரணமாக வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு விலை விண்ணை தொட்டன.

நாடு முழுவதும் கடும் வெங்காய பற்றாக்குறை நிலவுகின்றன. விலை வாசியை கட்டுப்படுத்தி மக்களுக்கு வெங்காயம் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மண்டிகளில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மதுரை மண்டல கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் அலுவலர்கள் விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் உள்ள வெங்காய மண்டிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வெங்காயத்தின் இருப்பு, அதனை வாங்கிய ரசீது உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டன. மொத்த வியாபாரிகள் 50 மெட்ரிக் டன்னும், சிறு வியாபாரிகள் 10 மெட்ரிக் டன் மட்டுமே வெங்காயம் இருப்பு வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகரில் கடைகள், குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யக்கூடாது. இது தொடர்பான புகார்களை 83000-64001 என்ற எண்ணில் தெரிவக்கலாம் என மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜான் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News