செய்திகள்
கைது

அவினாசி, பெருமாநல்லூர் பகுதிகளில் தொடர் திருட்டில் இலங்கை வாலிபர் கைது

Published On 2019-12-09 12:18 GMT   |   Update On 2019-12-09 12:18 GMT
அவினாசி, பெருமாநல்லூர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, பெருமாநல்லூர், சேவூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

அவினாசி போலீசார் அவினாசி ரங்கா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்றிருந்தார்.

மேலும் அந்த வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதைபார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து போலீசார் அவரை  போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் இலங்கையை சேர்ந்த தருண்(வயது 31) என்பதும், மதுரை அகதிகள் முகாமில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

தற்போது அவினாசி பகுதிகளில் பெயிண்டிங் வேலை பார்த்து வந்ததும், அவினாசி, சேவூர், பெருமாநல்லூர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரிடம் இருந்த 32 பவுன் தங்க நகைகள், 2 டி.வி, 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News