செய்திகள்
கோப்புப்படம்

மதுரை மாவட்டத்தில் 4,597 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2019-12-09 11:20 GMT   |   Update On 2019-12-09 11:20 GMT
மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் ஓட்டுப்புதிவு நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் ஓட்டுப்புதிவு நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 23 மாவட்ட கவுன்சிலர், 214 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 420 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.

இதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனுத்தாக்கல் செய்யலாம். மேலும் 3,940 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக வருகிற 27-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 30-ந்தேதி மீதமுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.

மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் 17-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 19-ந்தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News