செய்திகள்
மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து செய்தி.

73-வது பிறந்தநாள்: சோனியா காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2019-12-09 05:02 GMT   |   Update On 2019-12-09 05:02 GMT
73-வது பிறந்தநாள் காணும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு இன்று 73-வது பிறந்தநாள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களினால் துயரம் அடைந்த சோனியாகாந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஆனாலும் பல்வேறு கட்சித்தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சோனியா காந்திக்கு டுவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்ப தாவது:-


அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதில் முக்கியமான பங்களிப்பை செய்துள்ளது. அவர் இன்னும் பல ஆண்டுகள் பொது சேவை செய்ய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News