செய்திகள்
முக ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல்: நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை - முக ஸ்டாலின்

Published On 2019-12-07 13:55 GMT   |   Update On 2019-12-07 13:55 GMT
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: 

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று மாலை அறிவித்தார்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் வகையில் மாநில தேர்தல் கமிஷன், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அ.தி.மு.க. அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் கமிஷன் மாறியுள்ளது ஜனநாயகத்திற்கு வெட்கக் கேடாக உள்ளது.

புதிய உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும் முன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? நேர்மையான, உண்மையான தேர்தல் என்ற விஷயத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதை தவிர வேறுவழியில்லை என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News