செய்திகள்
விபத்தில் பலியான காரைக்கால் வாலிபர்

சூடான் தொழிற்சாலை விபத்தில் காரைக்கால் வாலிபர் பலி

Published On 2019-12-07 10:50 GMT   |   Update On 2019-12-07 11:04 GMT
சூடான் நாட்டுக்கு வேலைக்கு சென்ற காரைக்கால் வாலிபர் தீ விபத்தில் பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்கால், டிச.7-

சூடான் நாட்டில் உள்ள பீங்கான் ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 23 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இவர்களில் 18 பேர் இந்தியர்கள்.இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த வாலிபர் ராஜசேகரன் பலியாகி விட்டார்.

காரைக்கால் வாலிபர்

ஆனால் இங்கு வேலை பார்த்த காரைக்கால் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் கதி என்ன என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து வெங்காடசலம் பெற்றோர் புதுச்சேரி முதல் - அமைச்சர் நாராயணசாமி, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோ ருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது எனது மகனை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தனர்.

இதன் இடையே வெங்கடாசலம் சூடான் தொழிற்சாலை தீவிபத்தில் இறந்து போன தகவல் அதிகாரபூர்வமாக தெரியவந்தது.

இவரது சொந்த ஊர் காரைக்கால் அருகே திருநல்லாறு , வரு‌ஷபத்து கோட்டபாடி கிராமம் ஆகும். இவரது தந்தை சிதம்பரம், தாய் சித்ரா இவருக்கு தங்கை ஒருவரும் உள்ளார். ஐ.டி.ஐ. முடித்துள்ள வெங்க டாசலம் காரைக்கால் பகுதியில் வேலை கிடைக்காததால் வறுமையில் வாடினார். தனது குடும்ப சூழ்நிலையயை உணர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சூடான் நாட்டில் டைல்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.

வெங்கடாசலம் இறந்துபோன தகவல் அவரது பெற்றோக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறிதுடித்தனர். உறவினர்களும் அவர்க ளுடன் சோகத்தை பகிர்ந்துகொண்டனர்.

இந்த தகவல் அந்த பகுதில் காட்டுதீ போல பரவியது இதனால் கிராம மக்களும் இறந்துபோன வெங்கடாசலம் வீட்டு வந்து ஆறுதல் கூறியபடி இருந்தனர்.

இது குறித்து வெங்க டாசலத்தின் பெற்றோர் கூறுகையில் எனது மகனின் உடலை எங்கள் ஊருக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

* * * வெங்கடாசலம்

Tags:    

Similar News