செய்திகள்
வெங்காயம்

தர்மபுரியில் வெங்காய வரத்து குறைந்தது- கிலோ ரூ.100-க்கு விற்பனை

Published On 2019-12-06 16:28 GMT   |   Update On 2019-12-06 16:28 GMT
தர்மபுரியில் மழையின் காரணமாக பயிர்கள் அழுகியதால் வெங்காயவரத்து குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இது 90 நாள் பயிராகும்.

கடந்த சில வாரங்களாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் மழை பெய்ததால் வெங்காய பயிர்கள் அழுகின. இதன் காரணமாக வெங்காயவரத்து குறைந்தது. கர்நாடகத்தில் இருந்து தர்மபுரிக்கு வெங்காயம் இறக்குமதி செய்வதும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக தர்மபுரியில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. 

கடந்த மாதம் ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்கப்பட்ட 1 கிலோ வெங்காயம் தற்போது ரூ. 100 வரை விற்பனை ஆகிறது. மற்ற மாவட்டங்களில் வெங்காயம் ரூ. 160 வரை விற்கப்பட்டாலும் தர்மபுரியில் மட்டும் வெங் காயத்தின் விலை ரூ. 100 ஆக இருப்பதால் வெளி மாவட்ட வியாபாரிகள் தர்மபுரிக்கு வந்து வெங்காயத்தை கொள்முதல் செய்கிறார்கள்.

தற்போது ஓட்டல்களில் ஆம்லெட்டுக்கு வெங்காயத்துக்கு பதிலாக முட்டைகோஸ் பயன்படுத்துகிறார்கள். பிரியாணிக்கு வெங்காயம் கொடுப்பதில்லை.
Tags:    

Similar News