செய்திகள்
மீட்பு

திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் 2 மாணவர்கள் மீட்பு

Published On 2019-12-05 17:02 GMT   |   Update On 2019-12-05 17:02 GMT
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் 2 மாணவர்கள் மீட்பு

திருப்பூர்:

திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் திருப்பூர் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 15 வயது மாணவர் ஒருவர் பள்ளி சீருடையுடன் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த மாணவன் தேனியை சேர்ந்தவர் என்பதும் அங்குள்ள பள்ளியில் 10-ம்வகுப்பு படிப்பதும் தெரியவந்தது.

மேலும் பெற்றோர் திட்டியதால் பள்ளிக்கு செல்லாமல் பஸ் ஏறி திருப்பூர் வந்தது தெரியவந்தது. எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த போது போலீசார் பிடியில் சிக்கியுள்ளான்.

இதனை அடுத்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் மாணவனை போலீசார் ஒப்படைத்தனர்.

இதேபோல் திண்டுக்கலில் இருந்து திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் வந்து இறங்கிய 14-வயது மாணவரையும் வடக்கு போலீசார் பிடித்தனர். அவரும் பெற்றோர் திட்டியதால் திருப்பூருக்கு வந்தது தெரியவந்தது.

சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அந்த மாணவனையும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூரில் ஒரே நாளில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு புதிய பஸ் நிலையத்தில் தவித்த 2 மாணவர்களை போலீசார் உரிய நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News