செய்திகள்
ஜெயலலிதா

நாகர்கோவிலில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி நாளை மவுன ஊர்வலம்

Published On 2019-12-04 11:46 GMT   |   Update On 2019-12-04 11:46 GMT
ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி நாளை நாகர்கோவிலில் மவுன ஊர்வலம் நடைபெறுகிறது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்கள்.
நாகர்கோவில்:

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ. அசோகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது 3-வது ஆண்டு நினைவுதினம் நாளை (5-ந்தேதி) அனுஷ்டிக்கப்படுகிறது.

இதையொட்டி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து காலை 9.30 மணிக்கு மவுன ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலத்திற்கு நான் (எஸ்.ஏ.அசோகன்) தலைமை தாங்குகிறேன்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்கள்.

கலெக்டர் அலுவலகம் முன்பிருந்து புறப்படும் மவுன ஊர்வலம் டதி பள்ளி வழியாக வேப்பமூட்டில் உள்ள நகராட்சி பூங்காவை வந்தடைகிறது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

பின்னர் மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள ஜெயலலிதா படத்திற்கும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், பேரூர், கிளைக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் மாவட்டம் முழுவதும் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அனைத்து கிளைக் கழக பகுதிகளிலும், முக்கிய சந்திப்புகளிலும் அலங்கரித்து வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News